எம்மைப் பற்றி


DALA ஆனது இலங்கையில் டிஜிட்டல் கடன் வழங்கல் வணிகங்களை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் 2007 இன் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் (இல. GA00244823) உத்தரவாதத்தின் கீழ் ஒரு வரையறுக்கப்பட்ட கம்பனியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது எமது அங்கத்தவர்கள் 400க்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டிருப்பதோடு, 750,000 க்கு அதிக இலங்கையர்களது நிதித்தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறார்கள். DALA, இலங்கையில் டிஜிட்டல் கடன் வழங்கல் வணிகத்தின் நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிக்கும் கம்பனிகளின் இணைந்த ஒரு அமைப்பு என்பதோடு, DALA இனது விதிமுறைக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சுய நிர்வாகம் மற்றும் நியாயமான வணிக செயற்பாடுகளை தனது வழிமுறையாகக் கொண்டுள்ளது.

 நிறைவேற்று சபை அங்கத்தவர்கள்

Card image cap

Polina Vertey - Chairperson

Card image cap

Vadym Bortnyk

Card image cap

Igors Zemits

Card image cap

Alexander Afanasyev

Card image cap

Ivan Streltsov

 THE SECRETARIAT

Card image cap

President

 எமது அங்கத்தவர்கள்

 அங்கத்துவம்


DALA அமைப்பு அங்கத்துவமானது துறைசார் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் மற்றும் சக அங்கத்தவர்களோடு இணைந்து செயற்படுவதற்கும் பொருத்தமான ஒரு தளமாக இருக்கும். இவ் அமைப்பானது வணிகங்களை ஊக்குவிப்பதற்கும் இலங்கையில் டிஜிட்டல் வணிகத்தின் கண்ணியத்தைப் பேணுவதற்கும் தனது அங்கத்தவர்களின் பொதுவான விருப்பங்களை அரசாங்கத் தரப்பினரிடம் பிரதிநிதித்துவம் செய்கிறது. அதேவேளை, தனது அங்கத்தவர்களிடம் தொடர்ச்சியாக சந்தை நடப்பு விபரங்களை பகிர்ந்துகொள்ளல் மற்றும் துறைசார் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒருவருக்கு ஒருவர் உதவுதல் என ஒரு அறிவு மையமாகவும் DALA செயற்படுகின்றது.

பரந்தளவான fintech துறையுடன் தொடர்புடைய தரப்பினரை DALA உடன் அங்கத்தவர் ஒருவராக அல்லது பங்காளர் அமைப்பொன்றாக இணைந்துகொள்ளுமாறு வரவேற்கின்றோம். இலங்கையில் fintech துறையை விருத்தி செய்வதற்காக நாம் கரம் கோர்ப்போம்.


நீங்களும் DALA உடன் இணைந்துகொள்ள விரும்பினால், மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொள்ளுங்கள்: info@dala.lk

 விதிமுறைக் கோவை

 DALA இனது விதிமுறைக் கோவை அங்கத்தவர்களுக்கு சுய ஒழுங்குபடுத்தல் தளத்தைப் பெற்றுத் தருவதனால் இலங்கையின் ஒன்லைன் கடன் வழங்கல் சேவைகள் துறைக்கு இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.
 இத்துறையானது தானாக தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான தேவையை இனங்கண்டு, DALA அங்கத்தவர்கள் சிறப்பான நடத்தை மற்றும் உறுதியான வாடிக்கையாளரை மையப்படுத்திய கலாசாரத்தை ஊக்குவிக்கும் விதிமுறைக் கோவை ஒன்றை இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த கோவை தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுடன் ஒத்திசைவதோடு. இத்துறைக்கு சுய ஒழுங்குபடுத்தலையும் கொண்டு வருகிறது.
 இந்த விதிமுறைக் கோவையானது இலங்கையர்கள் மற்றும் இலங்கை பொருளாதாரத்தின் நன்மைக்காக நடத்தை, கலாசாரம், மற்றும் பாவனையாளர் விளைவுகளை தொடர்ச்சியாக மேம்படுத்துவதில் DALA அங்கத்தவர்கள் கொண்டுள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றது.
  கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நடத்தை விதிமுறைகளைப் பார்க்கலாம்.