எம்மைப் பற்றி


DALA (Digital Alternative Lending Association) ஆனது 2007 இன் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இலாப நோக்கமின்றி செயற்படும் அமைப்பாகும். DALA இலங்கையில் துரித வளர்ச்சி கண்டுவரும் fintech துறையில் ஒரு முக்கியமான தரப்பாக செயற்படுகிறது. டிஜிட்டல் கடன் வழங்கல் துறையின் சேவை வழங்குனர்களுக்கான ஒரே சுய ஒழுங்குபடுத்தல்கள் தரப்பினராக எம்மை வேறுபடுத்திக் கொண்டுள்ளோம். DALA தளத்தின் உருவாக்கமானது தமது அங்கத்தவர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் தொடர்புடைய கண்காணிப்பு அதிகாரசபைகளுடன் உறுதியான பிணைப்பினை, அதிக இணைவாக்கமான, திறந்த மற்றும் வெளிப்படையான முறையில் முன்னெடுப்பதற்கான ஒரு திருப்புமுனையாக அமையும்.
இந்த நோக்கத்தை எட்டுவதற்காக நியாயமான மற்றும் நெறிதவறாத வணிக நியமங்கள், வழிமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு உடன்பட்டு செயற்படுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. எமது அங்கத்தவர்கள் நிதித்தேவைகளுக்கு முகங்கொடுக்கும் இலங்கையர்களின் வாழ்க்கை வடிவங்களுக்கு நிதிசார் உதவிக்கரத்தை வழங்கி தரமுயர்த்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, இலங்கை நிதித்துறையின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக DALA முன்னின்று செயற்படும். மிக முக்கியமாக, ஒரு சுய ஒழுங்குபடுத்தல் தளம் என்ற வகையில், எமது அங்கத்தவர்களின் பொதுவான விருப்பங்களைப் பிரதிநிதித்துவம் செய்தவாறு டிஜிட்டல் கடன் வழங்கல் துறையை நடைமுறைப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் DALA ஒரு தனித்துவமான சந்தை வழிமுறையாக இருக்கும்.

 குறிக்கோள் அறிக்கை நோக்கங்கள்


இலங்கையிலுள்ள டிஜிட்டல் கடன் வழங்கல் சமூகத்தினர் தமது வணிகத்தை நெறிமுறையாகவும், நேர்மையாகவும், மற்றும் நாட்டின் சட்டவிதிகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டும் முன்னெடுப்பதை உறுதிசெய்வதற்காக நாம் செயற்படுவதோடு, அதன் மூலமாக முறையான வணிக நடவடிக்கைகள், அங்கத்தவர்களிடையே நல்லிணக்கம், தொடர்புடைய அதிகாரசபைகளுடன் இணக்கமான உறவு என்பவற்றை வளர்த்தெடுப்பதோடு, இலங்கை fintech துறையின் நேர்மை மற்றும் நம்பிக்கையை பேணி வருகின்றோம்.

 எமது அங்கத்தவர்கள்